Wednesday, August 26, 2009

கதற வைக்கும் காட்சிகள்

கப்பட்டதுண்டு துணிகளைக் கொண்டு பெற்றுத் தாலாட்டிய பிஞ்சுப் பிள்ளைகளின் சிதறிய உடல்களை இயன்றமட்டும் பொதிந்து, மண் தோண்டி அடக்கம் செய்கிற அவகாசம் இல்லாத காரணத்தால் வீதியில் எரிந்தும் எரியாமலும் நின்ற வாகனங்களுக்குள் சொருகி வைத்துச் சென்ற தாய்மார்களின் சோக வலியை நீங்கள் அறிவீர்களா? முள்ளி வாய்க்கால் - வட்டுவாகல் பிரதான வீதியில் மே-17-ம் தேதி நான் கண்டேன். அழுது புலம்பும் இடைவெளி கூட இல்லாத, கடவுளால் சபிக்கப்பட்ட இனமாய் நாங்கள் ஆனோம்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் (ஙமகபஒ இஆததஊக) எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவ ளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா... சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா... என்றெல்லாம் மனது கொதித்தது.

கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளி வாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு. குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளு கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது. நடந்த வற்றின், நடந்து கொண்டிருப்பவற் றின் கொடூரங் களும், விபரீதங் களும் அந்தக் குழந் தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், ""தாய், தகப்பன்...'' என்று ஆரம்பிக்கவே, ""எல்லாம் இப்போது நான்தான்'' என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங் களைக் காட்டினார். ""இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்'' என்றார்.

பெற்றோரை இழந்து, இரண்டு கால் களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பய ணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டி ருந்தது.

வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் "அம்மா பசிக்குது... அம்மா பசிக்குது...' என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். ""அப்பா... எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா... தண்ணீர் விடாக்குது... கெதியா எழும்புங்கோ அப்பா...'' என்று குளறிக்கொண்டிருந்தான்.

நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடிச் சொல்வாரே... ""அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு'' என்று... அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே... என்றெல்லாம் மனது எண்ணியது. முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே... ""தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்...'' என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன். உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு... : ""ஐயா, ஒபாமாவே... கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே... வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே... ஏமாற்றி விட்டீர்களே....'' என்று மனம் புலம்பியது.

(நினைவுகள் சுழலும்)


source:nakkheeran

Tuesday, August 25, 2009

இளம் பெண்ணே! கவனம்...


ஒரு பெண் உடை உடுத்தும் விதமும் அவளது பார்வையும், செய்கைகளும் அவளைச் சுற்றியுள்ள டீன் ஏஜ் வாலிபர்களை மட்டுமல்ல, 60 வயது வயோதிபரையும், 80 வயது கிழவனையும் பார்வைகள் வழியாய் பாதிக்கின்றது.    மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன,    நான் என் விருப்பம்போல் என் அழகினை வெளிப்படுத்த எனக்கு உரிமையுண்டு எனக் கூறாமல் உன் உடலையும்,    அழகையும், மறைவாயிருக்கவேண்டிய மார்பகங்களையும் மூடும்படி நீ உடை உடுத்தவேண்டும்.

இதை உன்னிடம் யாராவது கூறினால் கோபம் கொள்கிறாய். ஆனால் நீ கவர்ச்சியாக உள் அவயங்கள் தெரியும்படி உடுத்தும்போது பிறர் பாவ இச்சைகளால் தூண்டப்பட்டு அதினிமித்தம் பாலியல் பாவங்கள் செய்ய நீ காரணமாகிறாயே. எனவே எந்த வகையிலும் உன் நடை, உடை, பேச்சு பிறரைப் பாவத்திற்கு உள்ளாக்காமல் இருக்க நீ கவனமாய் இருக்கவேண்டும். அதற்காகவும் நீ ஜெபிக்கவேண்டும். உன் அழகு ஆண்டவருக்குரியதே தவிர பிற ஆடவற்குரியதல்ல.

எதிர் பாலருடன் பழகுகையில் உன் பார்வைகள் முதல் சந்திப்பிலேயே தடுமாறுகிறது என்றால் அந்த நபருடன் நீயும் மிக கவனமாகப் பழகவேண்டும்.    தேவையற்று அலைபாயும் உன் கண்களுக்கு கலிக்கமிடு (வெளி 3:18). உயிருக்குயிராய் நேசிக்கிறேன், காதலிக்கிறேன் எனக் கூறுகின்ற பலரும் இப்படிப் பார்வையில் சந்தித்து பின் உள்ளத்தால் நெருங்குகின்றார்கள். பின்பு அது காம உணர்ச்சியாக திசை திரும்ப சூழ்நிலைகள் வரும்போது விழுந்துபோகின்றார்கள். இந்த விஷயத்தில் ஆண்கள்தான் தவறு செய்கின்றவர்கள். ஆனால் பெண்கள் பேதைகள் என நிச்சயம் கூறமுடியாது.


தவறான அன்பிற்குத் தப்ப ஒரு பரிசோதனைப் பட்டியல்:
காதல், இச்சை, வாலிப ஆசை, பாவசோதனை, சிற்றின்பம் போன்ற சோதனைகளையெல்லாம் நீங்கள் வெற்றிகரமாக கடந்துவர சில எளியமுறைகள் இருக்கின்றன.    அவைகளை கவனமாக பயிற்சியுங்கள்.
    1. அனுதினமும் காலையில் ஆண்டவரிடம் கிருபை வேண்டி ஜெபியுங்கள்.
    2. வேதத்தில் நீதிமொழிகள், சங்கீதம் புத்தகத்தை தவறாமல் படியுங்கள்.
    3. எப்பொழுதுமே தனிமையில் இருக்காதீர்கள்.
    4. பாவசூழல் வாய்ப்பிருக்கும் இடங்களுக்குச் செல்லாதிருங்கள்.
    5. உங்கள் ஆடை பிறரை இச்சைக்கு நடத்தாதபடி உடுத்துங்கள்.
    6. உங்கள் மேலாடைகள் உள்ளாடைகளைப் பிரதிபலிக்கக்கூடாது.
    7. உங்கள் மார்பகங்களை மற்றவர்களுக்குக் காட்டும் வகையில் உடுத்தாதீர்கள்.
    8. உங்கள் பாதம் வரைக்கும் உங்கள் ஆடை மூடி இருக்கட்டும்.
    9. எந்த ஆணோடும் அதிகம் சிரித்துப் பேசாதீர்.
    10. ஆண்களை தொட்டுப் பேசும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.
    11. தேவையற்ற பார்வை, நீண்ட நேரப் பார்வைகளை தவிர்த்துவிடுங்கள்.
    12. எந்தக் காதல் கடிதத்தையும் ஏற்றுக்கொள்ளாதிருங்கள்.
    13. பெற்றோருக்கு தெரியாமல் எந்த ஆணுடனும் தொடர்புக்கொள்ளாதீர்
    14. எவராயினும் எதிர்பாலரோடு நீண்ட நேரம் உரையாடக்கூடாது.
    15. தேவைக்கு மிஞ்சிய அலங்கார ஆடம்பர அழகு செய்யக்கூடாது.
    16. அந்தரங்க காரியங்களை எந்த ஆடவரோடும் பகிரக்கூடாது.
    17. பள்ளி, கல்லூரியில் ஆண்களோடு அளவோடு பேசுங்கள்.
    18. இரக்கப்பட்டு பரிதாபப்பட்டு அடுத்தவரை நேசிக்கக்கூடாது.
    19. எந்த உறவுகளும் கர்த்தராலும், குடும்பத்தினராலும் அங்கீகரிக்க கூடியதாய் இருக்கட்டும்.
    20. உங்கள் விருப்பங்களை ஜெபத்தில் ஆண்டவருக்கு சொல்லுங்கள்.
    21. வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்க அவசரம் காட்டிவிடாதீர்கள்.
    22. சரியான வாழ்க்கை வரும்போது குறைசொல்லி தட்டிக்கழிக்காதீர்.
    23. திருத்திக்காட்டுகிறேன் என சவாலிட்டு ஒருவரை மணக்காதீர்கள்
    24. சபையில் கேட்ட தேவசெய்தியை எப்பொழுதும் நினைத்திருங்கள்.
    25. எந்த ஒரு பதிலையும் ஆண்டவரிடமிருந்து பெற்று முடிவெடுங்கள்.
இப்படி வாலிபப் பெண்களுக்குக் கூற பல்வேறு அறிவுரைகள் உள்ளன.    ஆனால் குறிப்பிட்ட சிலவற்றையே உங்களுக்கென கொடுத்திருக்கிறேன். உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் இயேசுகிறிஸ்து வரும்வரை குற்றமற்றதாய் காக்கப்படவேண்டுமென வேதம் கூறுகிறது (1தெச 5:23). அப்படியே உங்கள் ஆவி,    ஆத்துமா,    சரீரம் முழுவதும் உங்களுக்கொரு கணவன் வரும்வரை குற்றமற்றதாய் காக்கப்படவேண்டுமென்பதை நினைவில் கொள்ளுங்கள்.
"நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய், நானும் உன்னை சிநேகித்தேன்"(ஏசா 43:3). "அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன். ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன். இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னை கட்டுவிப்பேன்" (எரே 31:3-4) ஆகிய வாக்குத்தத்தங்கள் இதை வாசிக்கிற ஒவ்வொரு மகளுக்கும் உரியது.

 
 
 
sourace:jamakaran
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails