Wednesday, January 7, 2009

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை : இலங்கை அரசு அறிவிப்பு

 
 
 
 
 
 Imageதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை இன்று முதல் தடைசெய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தப்படுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
 
இலங்கை மத்திய அமைச்சரவை இன்று கூடிய போது இதற்கான ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.  இலங்கை மந்திரி சபையின் அவசர கூட்டம் கொழும்பு நகரில் அதிபர் ராஜபக்சே தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்வது குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று இரவு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த தகவலை வெளியிட்டார்.
 
ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு முறை புலிகளிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், சாதகமான பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
தற்போது முல்லைத்தீவு பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கில்,புலிகள் மீதான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விடுதலைப்புலி அமைப்பு தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9508&Itemid=52

No comments:

Post a Comment