Wednesday, January 7, 2009

ஒபாமாவுக்கு அல்கொய்தா தலைவன் எச்சரிக்கை: பாலஸ்தீனம் மீது தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்

 

கெய்ரோ, ஜன. 7-

பின்லேடனின் அல்- கொய்தா இயக்கத்தின் 2-ம் நிலை தலைவனாக இருப்பவர் அய்மான் அல்சவாகிரி.

எகிப்து நாட்டை சேர்ந்த சவாகிரி இணைய தளம் மூலம் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளான். பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வரு கிறது. அமெரிக்காவின் போக்கையும் அராஜகத்தை யும் மாற்றப்போவதாக கூறி மக்களை ஏமாற்றுகிறார் ஒபாமா.

இஸ்லாமிய நண்பர்கள் கொன்று குவிக்கப்படுகிறார் கள். அதை தடுத்து நிறுத்தும் எண்ணம் ஒபாமாவுக்கு இல்லை. அமெரிக்கா ஒரு போதும் தனது போக்கை மாற்றிக் கொள்ளாது.

எகிப்து அதிபர் முபாரக் ஒரு துரோகி. இஸ்ரேலின் தாக்குதலை தடுக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. காசாவில் போராடும் ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிரான நடவடிக்கை களை அவர் எடுத்து வரு கிறார்.

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை தடுக்க ஒபாமா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அல்சவாகிரி கூறியுள்ளார்.
 

No comments:

Post a Comment