Sunday, November 16, 2008

நாங்கள் இலங்கை போய் சண்டை போட முடியாது : விஜய்

                  


                    இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் இன்று உண்ணாவிரதம் இருந்தார். விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன், அம்மா ஷோபா சந்திரசேகரன், மனைவி சங்கீதா ஆகியோரும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.


                மேலும் இந்த உண்ணாவிரதத்தில் விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டன்ர்.  பழ.நெடுமாறன், தா.பாண்டியன், சுப.வீரபாண்டியன் ஆகியோரும்  உண்ணாவிரத பந்தலுக்கு வந்து விஜய்க்கு சால்வை அணிவித்து விஜய்யின் தமிழ் உணர்வுக்கும் ம்னிதாபிமானத்துக்கும் நன்றி சொன்னார்கள்.   இந்த உணர்வு இத்தோடு நின்று விடாமல் நீடிக்க வேண்டும் என்றும் விஜய்யிடம் கேட்டுக்கொண்டார்கள்.

                உண்ணாவிரத்தின் முடிவின்போது பேசிய விஜய்,

            ''எனது ரசிகர் நற்பனி மன்றம் சார்பில் தமிழகமெங்கும் உண்ணாவிரதங்கள் நடைபெறுகிறது.  இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும்.  தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேண்டும் . அதை வலியுறுத்தித்தான் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

            இலங்கையில் போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று நாங்கள் அங்கே போய் சண்டை போட முடியாது.  அதனால்தான் உண்ணாவிரதத்தின் மூலமாக எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்..

எங்களைப் போலவே பல்வேறு தரப்பினரும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வ்ருகிறார்கள். நிச்சயம் இலங்கை பிரச்சனை முடிவுக்கு வரும். போர் நிறுத்தம் வரும்.''  என்று தெரிவித்தார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=325

No comments:

Post a Comment