Saturday, November 15, 2008

புலிகளின் முக்கிய தளத்தை கைப்பற்றியது ராணுவம்



.         விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இத்தாக்குதலின் போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளை கைப்பற்றி வருகிறது.  தற்போது புலிகளின் பூநகரி முக்கியத்தளத்தையும் கைப்பற்றியுள்ளது.
.
        இதன் தொடர்ச்சியாக இன்று  இலங்கை ராணுவம் பூநகரியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய கடற்படை தளத்தை கையகப்படுத்தியுள்ளது.
ராணுவத்தின் முதலாவது அதிரடிப் படை இன்று காலை பூநகரியில் உள்ள புலிகளின் கடற்படை தளத்திற்குள் நுழைந்ததாக இலங்கை ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.எனினும், இதுதொடர்பான விரிவான விவரங்களை ராணுவ அமைச்சகம் தெரிவிக்க மறுத்துவிட்டது.


        இலங்கை ராணுவத்திடம் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இழந்து பின்னடைவை சந்தித்து வரும் விடுதலைப் புலிகளின்
முக்கியமான மற்றும் கடைசி கடற்படை தளம் இது.

இந்த தளத்தில் இருந்துதான் ராணுவ நிலைகள் மீது விடுதலைப்புலிகள் நீண்ட தொலைவு சென்று தாக்கக் கூடும் ஏவுகணை மற்றும் பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=303

No comments:

Post a Comment