Monday, July 7, 2008

வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் ஈரா‌க் போரு‌க்கு முடிவு: ஒபாமா!

வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் ஈரா‌க் போரு‌க்கு முடிவு: ஒபாமா!
''அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் ஈராக் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்'' என்று ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா கூறியுள்ளார்.

பதவியேற்ற 16 மாதங்களுக்குள் ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் திரும்பப் பெறப்படும் என்று ஏற்கனவே அறிவித்த உறுதி நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒபாமா முன்பு அளித்த உறுதிமொழியில் இருந்து விலகி செல்வதாக குடியரசு கட்சியினர் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு அளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈராக் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தாம் உறுதியுடன் இருப்பதாகவும் ஒபாமா கூறியுள்ளார்.
http://tamil.webdunia.com/newsworld/news/international/0807/06/1080706011_1.htm

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails