Tuesday, July 8, 2008

காபூ‌‌லி‌ல் இ‌ந்‌திய தூதரக‌ம் அருகே கு‌ண்டு வெடி‌ப்பு: 28 பே‌ர் ப‌‌லி

 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் அருகே இ‌ன்று தற்கொலைப்படை நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தொட‌ர்‌ந்து தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இன்று காலை காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே கார் குண்டு ஒன்று வெடித்தது.

இந்த தாக்குதலில் 26 பேர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே கொல்லப்பட்டதாகவும், இரண்டு பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் ஆப்கானிஸ்தான் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முகமது ஜகீர் ஹஸ்மி தெரிவித்துள்ளார்.

இந்த ‌நிக‌ழ்‌வி‌ல் 19 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர். அவ‌ர்க‌ள் காபூல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
http://tamil.webdunia.com/newsworld/news/international/0807/07/1080707014_1.htm

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails