Sunday, June 8, 2008

பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

கேரளா‌வி‌ல் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது
திருவனந்தபுரம் (ஏஜென்சி), சனிக்கிழமை, 7 ஜூன் 2008   ( 15:25 IST )
பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை கேரள மாநில அரசு குறைத்ததன் காரணமாக அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.22 காசுகளும் , டீசலுக்கு ரூ.0.66 பைசா காசுகளும் குறைந்துள்ளது.

பெட்ரோலுக்கு முன்பு 29.01 சதவீதமும், டீசலுக்கு 24.69 சதவீதமும் விற்பனை வரி விதிக்கப்பட்டு வந்தது.

இது தற்போது பெட்ரோலுக்கு 26.03 சதவீதமாகவும், டீசலுக்கு 22.49 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில முதலமைச்சர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
http://in.tamil.yahoo.com/News/National/0806/07/1080607020_1.htm

No comments:

Post a Comment