Sunday, June 8, 2008

கிறிஸ்தவ திருச்சபை உறுப்பினர் பதவியில் இருந்து அமேரிக்க அதிபர் வேட்பாளர் விலகல்

சர்ச் உறுப்பினர்: ஒபாமா விலகல்
.
Sunday, 01 June, 2008   11:19 AM
.
வாஷிங்டன், ஜூன் 1: அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த பாரக் ஒபாமா டிரினிட்டி ஐக்கிய சர்ச்சிலிருந்து விலகியுள்ளார்.
.
ஒபாமாவின் மத போதகர் இனவெறியை தூண்டும் வகையில் பேசியதால் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து தனது 20 ஆண்டுகால உறுப்பினர் பதவியிலிருந்து ஒபாமா விலகியுள்ளார்.

தனது விலகல் கடிதத்தை சர்ச் நிர்வாகத்திடம் ஒபாமா நேற்று அளித்ததாகவும், இதுபற்றி பின்னர் அவர் செய்தியாளர்களிடம் விவரிப்பார் என்றும் ஒபாமாவின் பிரச்சார தொடர்பு இயக்குனர் ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

முதலில் ஜெரிமியா ரைட் என்ற பாதிரியாரும், பின்னர் மைக்கேல் பிலெட்ஜர் என்ற பாதிரியாரும் தெரிவித்த கருத்துக்கள் ஒபாமாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

 

No comments:

Post a Comment