Thursday, June 5, 2008

பாக்தாத்தில் தற்கொலை படை தாக்குதல்: குண்டு வெடித்து 18 பேர் பலி

பாக்தாத், ஜுன். 5-
 

ஈராக்கில் போலீசார் மீதும், அமெரிக்க ராணுவத்தினர் மீதும் தீவிரவாதிகள் தொடர்ந்து தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தீவிரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலியாகி விட்டனர்.

இந்த நிலையில் பாக்தாத் நகரில் நேற்று மாலை தற்கொலை படை தாக்குதல் நடந்தது. அங்குள்ள உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் வீடு அருகே இந்த தாக்குதல் நடந்தது.

அந்த அதிகாரியின் வீடு அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் 15 பேர் உடல் சிதறி பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இதில் அந்த உயர் போலீஸ் அதிகாரி தப்பிவிட்டார். ஆனால் அவரது நெருங்கிய உறவினர் பலியானார். அவரது வீடு இடிந்து தரைமட்டமானது
 
 

No comments:

Post a Comment