Tuesday, March 25, 2008

தமிழ்மணமும்-ஜனநாயகமும்

தமிழ்மண நிர்வாகக்குழு கண்டிப்பாக யோசித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோம்
 
 
தமிழ்மணமும்-ஜனநாயகமும்

கடந்த ஒருவாரமாக தமிழ்மணத்தை உற்று பார்க்கும் நண்பர்கள் ஏதோ ஒருவித கிலி அடித்தே உள்ளனர்.ஏன் இந்த மாற்றம்.சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை இணையத்தில் உலாவ விட தமிழ்மணமே ஓர் உயர்ந்த அடைக்கலம் என்று இருக்கும் பதிவர்களை தமிழ்மணம் கடந்த நாட்களில் வெளியே தூக்கி எறிந்துள்ளது.

தமிழ்இஸ்லாம்டாட்கோம் என்ற ஒரு பதிவர் பகிரங்க மண்ணிப்புக்கடிதம் எழுதியும் அது நிராகரிக்கப்படுகிறது.இப்பொழுது இன்னொரு பதிவர் தன் பதிவை நீக்கியதற்காக சிலம்போடு வந்து நிற்கிறார்.

தமிழ்மணம் ஒரு ஜனநாயக புகலிடம் என்பது வாசகர்கள் அனைவரு அறிந்தது.பிறகு ஏன் இந்த படுகொலைகள்.

ஒரு பதிவர் தவறு செய்யும் பட்சத்தில் அவருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரின் பதிவை நீக்குவது பிறகு எந்த காரணத்திற்கு நீக்கப்பட்டது என்பதை விளக்கி மற்றவர்களும் அவர் போல் பதிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுவதும் சரியான நடைமுறை.

ஒரு வேளை எச்சரிக்கப்பட்ட அந்த பதிவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை தற்காலிகமாக தளத்தில் ஒதுக்கி வைத்தல் இந்த நடைமுறைகளே தமிழ்மணத்தின் ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்கும்.

வெளியேற்றப்படும் பதிவருக்கு அவரின் அடிப்படை உரிமைகள் கூட (அவரின் நியாயத்தை சொல்ல)மறுக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம் தமிழ்மண நிர்வாகிகள் யோசிபார்களா?

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails