http://iraiyillaislam.blogspot.in/2012/12/blog-post_27.html
முத்துக்குளிக்க வாரீகளா…! முத்ஆ செய்ய வாரீகளா..!
சிறுமிக்கு நிகழ்ந்த அநீதி: கேரளா முழுவதும் அதிர்ச்சி
திருவனந்தபுரம்:கேரளாவைச் சேர்ந்த, 17 வயது முஸ்லிம் சிறுமியை, அரபு ஷேக் ஒருவன் மணந்து, 17 நாட்களில் புறக்கணித்த விவகாரம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் இதுபோன்ற திருமணங்கள் நடக்காமல் தடுக்க, தகுந்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என, சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
17 நாள் குடித்தனம்:
கோழிக்கோடு பகுதியில் செயல்படும், முஸ்லிம் அனாதை இல்லத்தில், பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட சிறுமி, 4 வயது முதல் தங்கியிருந்தார். தற்போது, 17 வயதாகும் அந்தச் சிறுமியை, கடந்த ஜூன் மாதம், 13ம் தேதி, அரபு ஷேக் ஒருவர், முஸ்லிம் முறைப்படி மணந்து, சவுதி அரேபியா அழைத்துச் சென்று, 17 நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு, கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டார்.மாநில குழந்தைகள் கமிஷனை நேற்று முன்தினம் அணுகிய அந்தச் சிறுமி, தன்னை வலுக்கட்டாயமாக, ஷேக்குடன் திருமணம் செய்து வைத்த, அனாதை இல்ல நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். போலீசில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.நீண்டகாலமாகவே இத்தகைய கொடுமையான சம்பவங்கள், அந்தப் பகுதியில் நடைபெற்று வருவது, இந்தச் சம்பவம் வெளியானதை அடுத்து பலருக்கும் தெரிய வந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் இது போன்றதொரு சம்பவம், பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. படித்தவர்கள் நிறைந்த கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில், குறிப்பாக, மலபார் பகுதியில், இதுபோன்ற கொடுமைகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு, அம்மாநில சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
படித்தவர் நிறைந்த மாநிலம் :
மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.கே.ஸ்ரீமதி இது குறித்து கூறுகையில், ""படித்தவர்கள் நிறைந்த கேரளாவில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதை, ஏற்றுக் கொள்ளவே முடியாது. சம்பந்தப்பட்ட அனைவரும், தண்டிக்கப்பட வேண்டும். இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல், ஆளும் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
அனைத்திந்திய மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர், பிந்து கிருஷ்ணா கூறும் போது, ""தொண்டு நிறுவனங்களும், அனாதை இல்லங்களும் கருணையோடு நடந்து கொள்ளும் என, பொதுவான கருத்து நிலவும் நேரத்தில், பணத்திற்காக, அப்பாவி சிறுமி, வெளிநாட்டைச் சேர்ந்தவனுக்கு திருமணம் செய்யப்பட்டு, கொடுமைக்கு ஆளாகியுள்ளதை ஜீரணிக்கவே முடியாது,'' என்றார்.இதுபோல், பல சமூக அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும், கோழிக்கோடு அனாதை இல்ல சிறுமி திருமண விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
http://thamilislam.blogspot.in
1 comment:
bài viết hay mời bạn ghé thăm website và ủng hộ bên mình
BỘ CHĂN GA GỐI SÔNG HỒNG CLASSIC TC SH_C17 T16 GA CHUN
Post a Comment