Sunday, November 28, 2010

கணவர்களை உளவு பார்க்கும் பெண்கள்!

கட்டார் நாட்டில் தங்கள் கணவர் மீது சந்தேகப்படும் பெண்கள் அவர்களை உளவு பார்ப்பதற்காக அவர்களது சட்டைப்பையில் கமரா பொருத்தப்பட்ட பேனாக்களை செருகிவிடுவது. சிகரெட் லைட்டர்களை வைத்து விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

சில பெண்களின் கணவர்கள் கொடுக்கும் இதுபோன்ற அன்பளிப்புகளை கணவர்கள் ஏற்க மறுப்பதால், சில பெண்கள் கார்களில் உளவு பார்க்கும் சாதனங்களை பொருத்தி வைத்து விடுகிறார்கள்.

 

கட்டார் நாட்டு பெண்களிடம் நடத்திய ஆய்வில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கணவரை வேவுபார்ப்பதாக ஒப்புக் கொண்டனர்.

 

ஒரு பெண் தன் தந்தையின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு உரியதாக இருந்ததால், அவரை வேவு பார்ப்பதற்காக ஒரு மினி கமராவை பொருத்தி விட்டார். அப்போது தான் அவர் வேறு ஓரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்தது.

 

உளவு பார்ப்பதற்கு பயன்படும் மினி கமராக்கள் பொருத்தப்பட்ட பேனாக்கள், சிகரெட் லைட்டர்கள் கத்தார் மார்க்கெட்டில் தாராளமாக கிடைக்கின்றன..


source:tamilcnn



--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails