ஜகர்த்தா, செப். 3-
இந்தோனேஷியாவில் உள்ள சும்த்ரா தீவை சேர்ந்த 2 வயது சிறுவன் ஆர்டி ரிஷால். இவன் தினமும் 40 சிகரெட் பிடிப்பதாக இண்டர்நெட்டில் படத்துடன் செய்தி வெளியானது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிஷால் 6 மாத குழந்தையாக இருந்தபோது, அவனது தந்தை முதன் முதலாக ஒரு சிகரெட்டை பற்ற வைத்து அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து அவன் தினமும் 2 பாக்கெட் சிகரெட் பிடிக்க தொடங்கினான்.
அதிலும், அவனுக்கு திருப்தி ஏற்படாததால் தினமும் 40 சிகரெட் வரை பிடித்து வந்தான். இந்த செய்தி வெளி யானதும் இந்தோனேஷியாவில் புகையிலையை பயன்படுத்து வோர் எண்ணிக்கை அதிகம் என தெரிய வந்தது.
சிகரெட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் ரிஷாலை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க இந்தோனேஷிய அரசு ஜகார்த்தா ஆஸ்பத்திரியில் தங்க வைத்து சிகிச்சை அளித்தது. அதை தொடர்ந்து தற்போது அவன் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விட்டான்.
இத்தகவலை, இந்தோனேஷிய குழந்தைகள் பாதுகாப்பு தேசிய கமிஷனர் செயலாளர் அரிஸ்ட் மெர்தெகா சிரெய்ட் தெரிவித்துள்ளார்.
source:maalaimalar
source:maalaimalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment