Wednesday, February 10, 2010

துருக்கி : மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது

 
இளைஞர்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த தந்தையும், தாத்தாவும் 16 வயது பெண்ணை குழி தோண்டி உயிருடன் புதைத்தனர். துருக்கியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.தென்கிழக்கு துருக்கியில் உள்ளது காடா நகரம். அங்கு வசிப்பவர் அய்கான். அவருக்கு 9 குழந்தைகள். அவர்களில் ஒருத்தி 16 வயது மதினா மெமி. இவளை கடந்த 40 நாட்களாக காணவில்லை என அக்கம்பக்கத்தினரிடம் இருந்து போலீசுக்கு தகவல் சென்றது. 

சந்தேகம் அடைந்த போலீசார், தந்தை, தாத்தாவிடம் விசாரித்தனர். இருவரும் சேர்ந்து வீட்டின் பின்பகுதியில் 6 அடி ஆழ குழி தோண்டி மதினாவை உயிருடன் புதைத்த கொடுமை தெரிய வந்தது. இதையடுத்து மதினாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. 

குழிக்குள் உட்கார்ந்த நிலையில் பின்னால் கைகள் கட்டப்பட்டு மதினா உடல் இருந்தது. ''எங்கள் எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்து இளைஞர்களுடன் மதினா பேசி வந்ததால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்று பயந்தோம். அதனால், அவளை உயிருடன் புதைத்தோம்'' என்று இருவரும் தெரிவித்தனர்

source:z9world

--
www.thamilislam.co.cc

No comments:

Post a Comment