Thursday, December 3, 2009

தாய் தூங்கிவிட்டதால் விபரீதம் பாலூட்டும்போது மூச்சு திணறி குழந்தை பலி; விமான பயணத்தில் சம்பவம்


 
 லண்டன், டிச.3-

அமெரிக்க தலைநகரம் வாஷிங்டனில் இருந்து குவைத்துக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் எகிப்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பிறந்து 1 மாதமே ஆன கைக்குழந்தையுடன் பயணம் செய்தார்.
 
விமானம் பறந்து கொண்டிருந்தபோது குழந்தை பசியால் அழுதது. எனவே அவர் பாலூட்டினார். அப்படியே அயர்ந்து தூங்கி விட்டார்.
 
குழந்தை கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக குழந்தையை இறுக்கி அணைத்தப்படி பாலூட்டி கொண்டிருந்தார். தூங்கும் போது தன்னை அறியாமலேயே இன்னும் அதிகமாக இறுக்கி அணைத்துள்ளார்.
 
அவர் கண் விழித்து பார்த்தபோது குழந்தை மயங்கியபடி மடியில் கிடந்தது. உடனே விமான ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார்.
 
அப்போது விமானம் இங்கிலாந்து அருகே பறந்து கொண்டிருந்தது. இதனால் லண்டன் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரை இறக்கினார்கள்.

குழந்தையை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்


source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Post a Comment