Saturday, August 22, 2009

புலிகளுடனான போரில் 14,000 இராணுவத்தினர் கால்களை இழந்துள்ளனர்

 
 

விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைப்பெற்ற போரில் 14 ஆயிரம் படையினர் தமது கால்களை இழந்துள்ளனர் என்று செயற்கைக் கால்களைத் தயாரிக்கும் அவாஸ் இன்டர்நெஷனல் என்ற அமைப்பு சேகரித்துள்ள தரவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது. 
 
படையினருக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் பணியினை இந்த அமைப்பு எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. கால்களை இழந்தவர்களில் ஒரு காலை மற்றும் இரண்டு கால்களையும் இழந்தவர்களும் அடங்குவர் என்று தெரிய வருகின்றது. 
 
இது பற்றி இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் வினவியப்பொழுது இந்த எண்ணிக்கை பற்றி உறுதியான தகவலை தெரிவிக்க மறுத்து விட்டார்.
 

No comments:

Post a Comment