Wednesday, July 8, 2009

திருமணத்தை நிறுத்து: சானியா மிர்சாவை மிரட்டிய வாலிபர் கைது

திருமணத்தை நிறுத்து: சானியா மிர்சாவை மிரட்டிய வாலிபர் கைது
    



    இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் நிச்சயதார்த்தை நிறுத்த வேண்டும் என கூறி அவருக்கு மொபைலில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.


இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா. இவருக்கு நாளை மறுநாள் (10.07.2009) முகமுது சோப்ரப் மிஸ்ரா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் சானியா வசிக்கும் அதை பகுதியில் இருக்கும் முகமது அஷ்ரப் (28) என்ற என்ஜினியரிங் மாணவர் தான் அவரை காதலிப்பதாக கூறி சானியாவுக்கு அடிக்கடி எஸ்எம்எஸ் மூலம் செய்திகள் அனுப்பியுள்ளார்.

அவரது மொபைலுக்கு பலமுறை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும், அவரது திருமண நிச்சயதார்த்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார். இதை சானியா தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் 'சானியாமேனியாவில்' பீடிக்கப்பட்ட அந்த வாலிபர் சானியாவின் வீட்டுக்கு வந்து அவரது தந்தை இம்ரான் மிர்சாவிடம் தான் சானியாவை காதலிப்பதாகவும், அதனால் நிச்சயதார்த்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

 
 
 

No comments:

Post a Comment