Saturday, June 27, 2009

மீண்டும் பிரபாகரன் தலைமையில் போர் தொடங்கும்

மீண்டும் பிரபாகரன் தலைமையில் போர் தொடங்கும்: பழ.நெடுமாறன்
 
திருச்சியில் தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பொன்னிறைவன் தலைமை தாங்கினர். சோமசுந்தரம் வரவேற்று பேசினர். கூட்டத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 
 
உலகிலேயே தமிழர் களைத்தான் வீரமரபினர் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது ஈழத்தமிழர்களைத்தான் வீரமிக்கவர்கள் என்று உலகம் மதிக்கிறது. ஏனென்றால் இலங்கையில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு எதிராக இலங்கை ராணுவம் மட்டும் போரிடவில்லை. 
 
இந்தியா, சீனா உள்பட 20 நாடுகள் கூட்டு சேர்ந்து கொண்டு விடுதலைபுலிகளை எதிர்த்து போரிட்டது. இலங்கை ராணுவம் மட்டும் விடுதலை புலிகளை எதிர்த்து போரிட்டது என்றால் விடுதலைப்புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டிருக்காது.
 
எனினும் இது நிரந்தர தோல்வியில்லை இதில் இருந்து பிரபாகரனும், விடுதலைபுலிகளும் மீள்வார்கள் மீண்டும் பிரபாகரன் தலைமையில் போர் தொடங்கும்.
 
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக 6 1/2 கோடி தமிழர்களும் குரல் கொடுத்தால்தான் உலக தமிழர்களும் மீதி உள்ள ஈழத்தமிழர்களை காப்பாற்ற குரல் கொடுப்பார்கள். அப்போதுதான் உயிர் தியாகம் செய்த முத்துக்குமார், அமரேசன் உள்பட 12 பேரின் உயிர்த்தியாகத்துக்கு பலன் கிடைக்கும். என்றார்.

No comments:

Post a Comment