Saturday, June 6, 2009

உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி; வங்காளதேசத்தை தோற்கடித்தது

 
20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி இங்கிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. முதலில் களம் இறங்கியது இந்தியா. தொடக்க வீராக காம்பீர் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். ரோகித் சர்மா 36 ரன்னிலும், காம்பீர் 50 ரன்னிலும் அவுட் ஆனார்கள். யுவராஜ் சிறப்பாக ஆடி 18 பந்தில் 41 ரன்களை எடுத்து இந்தியா ரன் குவிப்பதற்கு கைகொடுத்தார். தோனி 26 ரன்னும், ரெயினா 10 ரன்னும் எடுத்து அவுட்டானார். கடைசியில் பதான் சகோதரர்கள் களத்தில் இருந்தனர். இதில் இர்பான் பதான் 3 பந்தில் 11 ரன் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருத்தார். ஆட்டநேர இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது.

No comments:

Post a Comment