அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
அதிர்ச்சியூட்டும் எஸ்.எம்.எஸ். : அலறுகிறது திருச்சி
திருச்சியில் பலரின் செல்போன்களுக்கும் ஒரு அதிர்ச்சியூட்டும் எஸ்.எம்.எஸ். பரப்பபட்டு வருகிறது. அதில் முக்கிய தகவல். ஜாக்கிரதை என்ற வாசகத்துடன் தொடங்குகிறது. ''செல்போன் வாடிக்கை யாளர்களே... உங்கள் செல்போனை எந்த ஒரு ஆண் அல்லது பெண்ணோ தொடர்பு கொண்டு "ஆஸ்"09 அல்லது "ஆஸ்" 90 என்ற எண்ணை டயல் செய்யும்படி கூறினால் செய்ய வேண்டாம்.
அந்த அழைப்பை கட் செய்து விடுங்கள் ஏனென்றால் அது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அழைப்பாக இருக்கலாம். உங்கள் சிம்கார்டு நம்பரை அதன் மூலம் அறிய முயற்சிக்கலாம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எஸ்.எம்.எஸ். பிரபல 2 செல்போன் நிறுவனங்கள் மூலம் அது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முயற்சிதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த எஸ்.எம்.எஸ். தகவல் குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகளின் செல்போன்களுக்கே வந்துள்ளது. இதனால் அவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
No comments:
Post a Comment