அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
சேகுவாரா பேத்தியின் அரைநிர்வாண ஆர்ப்பாட்டம்
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தென் அமெரிக்க மக்களை திரட்டியவர் சேகுவாரா. கியூபா புரட்சிக்கு தளகர்த்தராக இருந்தவர். இவரது பேத்தி லிடியா குவாரா, இவர் இன்னொரு புரட்சிக்கு கொடி பிடித்து இருக்கிறார்.
அவர் சைவ உணவுக்கு ஆதரவான விளம்பரப்புரட்சியில் பங்கு கொண்டு இருக்கிறார்.
மிருகவதை தடுப்பு இயக்கம் உலகம் முழுவதும் விளம்பரங்களை செய்து வருகிறது. இந்த இயக்கம், உணவுக்காக ஆடு மாடுகளை வெட்டுவதையும், உடைக்காக ஆடு, கரடி ஆகியவற்றின் தோல்களை எடுப்பதற்காக அந்த மிருகங்களை கொல்வதையும் எதிர்த்து உலக முழுவதும் புரட்சி விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது.
இந்த விளம்பரங்களில் பெண்கள் அரை நிர்வாணமாக காட்சி அளிப்பது உண்டு. அப்படி ஒரு விளம்பரத்தில் லிடியா தோன்றி இருக்கிறார்.
அவர் அரை நிர்வாணமாக மேலாடை இல்லாமல் தோன்றிய விளம்பரம் வருகிற அக்டோபர் மாதம் முதல் பத்திரிகைகளில் வெளியாக இருக்கிறது. இந்த விளம்பரம் முதலில் அர்ஜென்டைனா நாட்டில் வெளியாக இருக்கிறது. இந்த நாட்டில் தான் லிடியா தோன்றினார்.
24 வயதான லிடியா, சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர் என்பதை அறிந்ததும் அந்த இயக்கம் அவரை இந்த விளம்பரத்தில் தோன்றும்படி கேட்டுக்கொண்டது. அவரும் இதற்கு சம்மதித்தார்.
No comments:
Post a Comment