Saturday, May 30, 2009

விடுதலைப்புலிகளை வென்றதும் ராஜபக்சேவுக்கு பாராட்டின தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள்

விடுதலைப்புலிகளை வென்றதும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்தினார்கள்: ராஜபக்சே

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே 'தி வீக்' என்ற ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்பேட்டியில்,  ''புலிகளுக்கு எதிராக என்னுடைய வெற்றியும் சோனியா காந்தியின் தேர்தல் வெற்றியும் ஒரே சமயத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல்
காட்டியிருக்கிறது.


விடுதலைப் புலிகளை ஆதரித்த கட்சிகள் தோற்றுவிட்டன; எங்களுடைய நடவடிக்கைகளை ஆதரித்த கட்சியும் கூட்டணியும்
வென்றிருக்கிறது. புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள்.


 புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு
பாராட்டினார்கள். அவர்கள் யாரென்று தெரிவிக்க விரும்பவில்லை''அதிரவைத்துள்ளார் ராஜபக்சே.

No comments:

Post a Comment