Sunday, May 31, 2009

புளூ டூத் பஸ் சர்வீஸ் இந்தியாவில் அறிமுகம்

மும்பை: விரைவில் புளூ டூத் பஸ் சர்வீஸ்

        மும்பையில் புளூ டூத் டெக்னாலஜி கொண்ட பஸ் சர்வீஸ் விரைவில் துவக்கப்படவுள்ளதாக போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர், நியூயார்க் போன்ற நகரங்களில் இந்த வசதி உள்ளது. இம்முறை அமலுக்கு வந்தால், பஸ் செல்லும் பாதை, அடுத்த ஸ்டாப், இன்னும் எவ்வளவு நேரத்தில் பஸ் சென்றடைய வேண்டிய இடத்தை அடையும் போன்ற தகவல்களை பஸ்சில் இருந்தபடியே செல்போன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முதல்கட்டமாக, நீண்ட தூர பஸ்களிலும், பின்னர் குறைந்த தூர பஸ்களிலும் இந்த வசதி செய்து கொடுக்கப்படும் என்றும், இதன் மூலம் சுமார் 50 லட்சம் பயணிகள் பயனடைவர் என்ற மும்பை மாநகர போக்குவரத்து கழக தலைவர் திலீப் படேல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment