| http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dPj0q0ecGG7L3b4j9Ei4d3g2h3cc2DpY3d436QV3b02ZLu2e விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலி:பாதுகாப்பு அமைச்சகம் |
| ] |
| |
| இன்று காலை வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் இடம்பெற்ற இராணுவநடவடிக்கைகளின் போது விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோரது சடலங்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துளது. அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விடுதலை புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக பா.நடேசன் பணியாற்றிவந்தார் .இவர் முன்னதாக ஸ்ரீலங்கா பொலிஸில் கான்ஸ்டபிளாகவும் கடமையாற்றியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.விடுத்லை புலிகளின் சமாதான செயலக தலைவராக புலித்தேவனும், விடுதலை புலிகளின் விசேட இராணுவ தலைவராக ரமேஷும் கடமையாற்றி வந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள இத்தகவல்கள் குறித்து விடுதலை புலிகள் இதுவரை எதுவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
No comments:
Post a Comment