Wednesday, May 13, 2009

முதுமை:குளியல் அறையில் வழுக்கி விழுந்தார் முதல்வர்!

முதுமை:குளியல் அறையில் வழுக்கி விழுந்தார் முதல்வர்!

மேற்கு வங்காளத்தில் 23 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர், ஜோதிபாசு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரான அவருக்கு 95 வயது ஆகிறது. முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் அவர், கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார்.

அவரது வீட்டின் குளியல் அறையில் கடந்த செப்டம்பர் மாதம் அவர் வழுக்கி விழுந்தார். அப்போது ஜோதிபாசுவின் முன் நெற்றியில் காயம் ஏற்பட்டது. மேலும் மூளை பகுதியிலும் ரத்தக்கட்டு உருவாகியது. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற போதிலும் முதுமை காரணமாக டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யவில்லை. எனவே, கொல்கத்தாவில் உள்ள வீட்டிலேயே ஜோதிபாசு சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், இரண்டாவது முறையாக குளியல் அறையில் ஜோதிபாசு வழுக்கி விழுந்தார். உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்போது அவருடைய இடதுகாலில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment