| புதுக்குடியிருப்பில் உள்ள பரந்தன் சாலைக்கு அருகிலுள்ள வலையப்பட்டி பகுதி புலிகளின் மண் அரணை கைப்பற்ற இராணுவம் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் சசுமார் 998 பொதுமக்கள் ஊயிரிழந்துள்ளதாகவும் 1215 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை இராணுவமானது கடும் எறிகணைத்தாக்குதல் மற்றும் விமானத்தாக்குதல் சகிதம் முன்னேறி வருவதாகவும் சுமார் 10,000 பொதுமக்களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக பிடித்துவைத்திருப்பதாகவும், ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கிடைக்கபெற்ற தகவலின் படி 1000 க்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாகவும் 1500 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் மேலும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது. |
No comments:
Post a Comment