Wednesday, April 15, 2009

இலங்கையில் பல பகுதிகளில் நில நடுக்கம்

இலங்கையில் பல பகுதிகளில் சிறிய நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது
 
சற்று நேரத்துக்கு முன்னர் இலங்கையின் பலப் பகுதிகளிலும் நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வினை சற்று முன்னர் நன்கு உணரக் கூடியதாக இருந்ததாக, நில அதிர்வு ஏற்பட்ட பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நில அதிர்வு பண்டாரவளை, அட்டாம்பிட்டிய, நுவரெலியா, பொத்துவில், கல்முனை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக, இலங்கை நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மூலம்

No comments:

Post a Comment