Friday, April 17, 2009

மூன்று நாள் எதிர்ச் சமரில் 500-க்கும் அதிகமான படையினர் பலி! 600-க்கும் மேற்பட்டோர் காயம்!

 
கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றது. இதில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 500-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 600-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.

புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள இரட்டைவாய்கால் பகுதியைக் கைப்பற்றும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் மூர்க்கமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

முதலாவது மண்ணரனைக் கைப்பற்றி இரட்டைவாய்கால் சந்தியைக் கைப்பற்றுவதற்காக படையினர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முதலாவது அரணையைப் படையினர் கைப்பற்றுவதும் அதனை விடுதுலைப் புலிகள் மீட்பதுமாக தொடர்ச்சியான மோதல்கள் இப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன.

இதேநேரம் தொடர் எறிகணை மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி தாக்குதல்களை தொடுத்துள்ள சிறீலங்காப் படையினர் மக்கள் பாதுகாப்பு வலயப்பகுதிகள் பார்வைக்கு உட்படும் பிரதேசங்களில் குறிசூட்டுத் தாக்குதல்களையும், உந்துகணைத் தாக்குதல்களையும், நெடுந்தூரத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை மக்களை இலக்கு வைத்து நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment