Friday, March 6, 2009

தமிழீழ விடுதலை புலிகள் தோல்வி அடைந்துவிட்டார்கள்

தமிழீழ விடுதலை புலிகள் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்ற விஷயத்தை கனவிலும் கூட கேடககூடாது என்று உலக தமிழினம் அனுதினமும் இறைவனை வேண்டிக்கொன்ண்டிருக்கும் இந்த வேளையில் மக்களை கொன்று புலிகளை முழுமையாக அழிக்க ராஜபக்ஷே நினைத்து வருகின்ற இந்த நிலையில் உலக தமிழினமக்கள் ஒன்றை  மறந்துவிடக்கூடாது.
 
உலக வல்லரசாக உலவிவரும் அமேரிக்காவும்,அதன் செல்லக்குழந்தையான இஸ்ரேலும் ஹமாஸ்,மற்றும் தலிபானுக்கு எதிராக எத்தனையோ தாக்குதல்களை நடத்தின போதும் முற்றாக அழித்துவிட முடியவில்லை.
 
ஹமாசும்,தலிபானும்,புலிகளும் ஒரே நிலையில் வைத்துப்பார்க்கப்பட வேண்டியவர்கள் இல்லாவிட்டாலும் போராட்ட மனபான்மையில் ஒரே நிலையில் உள்ளவர்களே.அப்படியானால் புலிகள் மீன்டும் பலம் பெறுவது கடினமான காரியமல்ல.வெளியுலகில் வாழும் புலம்பெயர்ந்தவர்கள் களத்தில் நடந்து வரும் சமரைக்காட்டிலும் தீவிரமாக உழைக்க கடமைப்பட்டுள்ளோம்.உலக நாடுகளில் இதுவரை கேட்கப்படாத தமிழினத்தின் குரலை கேட்கும்படி செய்ய வேண்டும்.
 
ஒரு விடியலுக்காக காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயாத்தில் தமிழினம் நகர்த்தபடுள்ளது.  இதுவே தமிழனுக்கான முதல் வெற்றி.
 
 
 
மேலதிகமான கருத்துக்களுக்கு
 
 
 

No comments:

Post a Comment