Thursday, February 5, 2009

வேட்டியை அவிழ்த்து தீ வைத்தார் அதிமுக தொண்டர்

ஈழத்தமிழர் அவலத்திற்கு அதிமுக மௌனம் தொண்டர் ஆவேசம்
 
ஈழத்தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் தம் கட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றுக் கூறி அ.தி.மு.க கரை வேட்டியை தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக தொண்டர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 
தூத்துக்குடி போல்டன்புரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு வயது 40. அ.தி.மு.க தொண்டரான இவர் சிவந்தாகுளம் சந்திப்பில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். சக்திவேல் தனது நண்பர் ராமசாமிபுரம் 2வது தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (50) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

 

 
அப்போது ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவது பற்றி பேச்சு வரவே திடீரென்று ஆவேசமடைந்த சக்திவேல் தான் அணிந்திருந்த அ.தி.மு.க கட்சி வேட்டியை அவிழ்த்து வீசினார். பின்னர் வேட்டியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.

 
ஈழத்தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் தம் கட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கதறியபடியே கோஷம் எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தென்பாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் விரைந்து சென்று சக்திவேல், அவரது நண்பர் சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

 

 

 

 

 

 

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1808&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

No comments:

Post a Comment