Wednesday, February 25, 2009

புதிய தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்

ஸ்ரீகாந்த்-நமீதா ஜோடியாக நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படம், `இந்திர விழா.' இந்த படத்தை கே.ராஜேஷ்வர் டைரக்டு செய்து இருக்கிறார்.  படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்தது.

விழாவில், கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ''ஆஸ்கார் விருது பெற்ற தமிழன் ஏ.ஆர்.ரகுமானை பாராட்டி, உலகமே எழுந்து நின்று கை தட்டுகிறது. இந்திய திரையுலகுக்கு தலைமை தாங்கும் தகுதி, தமிழ் திரையுலகுக்கு வந்து இருக்கிறது.

உலக திரையுலகுக்கு தலைமை தாங்கும் தகுதி, இந்திய திரையுலகுக்கு வந்து இருக்கிறது.

மலேசிய தமிழர்கள் நடத்திய விழா ஒன்றில் நானும், ஏ.ஆர்.ரகுமானும் பங்கேற்றோம். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பெயரில், வேறு ஒரு பாடலை பாடினார்கள். இங்கு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ``நீராரும் கடலுடுத்த'' என்ற பாடலை அவர்கள் பாடவில்லை.

``நீராரும் கடலுடுத்த'' பாடலில், இந்திய எல்லைகள் குறிக்கப்பட்டு இருக்கிறது. அதை உலக தமிழன் எப்படி பாடுவான்? இந்த சிக்கலை தீர்க்க உலக தமிழர்களுக்காக, புதிய தமிழ் தாய் வாழ்த்து பாடலை எழுதப்போகிறேன்.

அந்த பாடலுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் சம்மதித்து இருக்கிறார்'' என்று தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment