Sunday, December 7, 2008

பாகிஸ்தானுக்கு ’தீவிரவாத நாடு’ முத்திரை : ஒபாமா

பாகிஸ்தானுக்கு 'தீவிரவாத நாடு' முத்திரை : ஒபாமா

மும்பையில் நடந்த கொடூர தாக்குலுக்கு பாகிஸ்தான் பின்னணியில் இருந்ததை இந்தியா ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. உலக நாடுகளும் இதை உணர்ந்துள்ளது.  

பாகிஸ்தானின் ஐஎஸ் ஐ உளவுப்பிரிவுதான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியாவுக்கு அனுப்பியிருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக இந்தியா நிரூபித்துள்ளதால் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா பாகிஸ்தானை பலமுறை எச்சரித்தது. 

அதற்கு பலன் இல்லாததால் பாகிஸ்தானுக்கு தீவிரவாத நாடு என்ற முத்திரை குத்துவதை தவிர வேறு வழியில்லை என்று ஆலோசனை செய்திருக்கிறார் அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமா.

ஜனவரி 20 அன்று ஒபாமா அதிபர் பதவி ஏற்கிறார்.  அதன்பிறகு அவர் தீவிரவாத நாடு என்று பாகிஸ்தானின் மீது முத்திரை குத்தி நடவடிக்கைகள் எடுக்கவிருக்கிறார்.
 

No comments:

Post a Comment