Wednesday, December 3, 2008

இந்தியாவுக்குள் 500-தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்:அஜ்மல் வெளியிட்ட பரபரப்பு தகவல்

 
 
 
இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:மும்பையில் கொலை வெறி தாக்குதல் நடத்திய தீவிரவாதிரகளில் பிடிபட்ட அஜ்மல்,அடுத்தடுத்து பல்வேறு "திடுக்" தகவல்களை தனது வாக்கு மூலத்தில் தெரிவித்து வருகிறான்.

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தை யொட்டி கடந்த செப்டம்பர் 27-ந் தேதி இந்தியாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தோம்.

ஆனால்,லஷ்கர்- இ-தொய்பா அமைப்பை சேர்ந்த ஜாகீர் ரகுமான் இந்த திட்டத்தில் அதிரடி மாற்றம் செய்தார்.

இதையடுத்து கடந்த 26-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு மும்பையில் தாக்குதல் நடத்தினோம் என்றான்.

இது தவிர மற்றொரு "பகீர்" தகவலையும் அஜ் மல் வெளியிட்டுள்ளான்.

பாகிஸ்தானில் 500-தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.அந்த தீவிரவாதிகள் கிறிஸ்துமஸ்,புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கோவா மற்றும் புனே பகுதியில் பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த கொடூர திட்டத்தை செயல்படுத்த கோவா கடற்கரை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர் என்று அஜ்மல் தெரிவித்துள்ளான்.

மும்பை தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கோவா,புனேயிலும் நாசகார செயலில் ஈடுபட தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1228294864&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment