Friday, November 14, 2008

விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல்;75 ராணுவ வீரர்கள் பலி

 
 
 
 
 
Imageஇலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை சிங்கள ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கை ராணுவத்தின் மும்முனை தாக்குதலை விடுதலைப்புலிகள் ஆவேச தாக்குதல் நடத்தி முறியடித்து வருகிறார்கள்.
இன்று அதிகாலை இலங்கை அக்கராயனில் உள்ள முட்கொம்பு பகுதியில் இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியபடி முன்னேறி வந்தனர். அவர்களை விடுதலைப்புலிகள் தடுத்து நிறுத்தி அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதிகாலை முதல் மாலை வரை நடந்த இந்த சண்டையில் 20 ராணுவத்தினர் பலியானார்கள்.இதே போல அக்கராயன் குளம் கோணவில் பகுதியிலும் முன்னேறி சென்ற ராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 12 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர்.
 பனிக்கன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் உள்ள சாலைகளை சிங்கள ராணுவத்தினர் மூடிவிட்டு அங்கிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தினார்கள். விடுதலைப்புலிகள் நாலாபுறமும் அவர்களை சுற்றி வளைத்து எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இதில் 43 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
 கடந்த 2 நாட்களில் பல்வேறு பகுதிகளில் நடந்த கடும் சண்டையில் மொத்தம் 75 சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தினரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றிவிட்டனர்

 

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6986&Itemid=52

No comments:

Post a Comment