Wednesday, November 5, 2008

3பேரிடம் கற்பிழந்த சிறுமியை கல்லால் எறிந்து கொன்ற தீவிரவாதிகள்-சோமாலியாவில் கொடூரச் செயல்

சோமாலியா நாட்டில் கற்பை பறிகொடுத்த சிறுமியை கல்லால் எறிந்து தீவிரவாதிகள் கொன்றனர்.சோமாலியா நாட்டின் கிஸ்மோ பகுதியை சேர்ந்தவர் துக்ளவ்.இவருடைய மகள் ஆயிஷா இப்ராகிம் துக்ளவ் (வயது 13).இந்த சிறுமியை 3காமுகர்கள் சேர்ந்து கதற கதற கற்பழித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

மகளின் பரிதாப நிலையை கண்டு துக்ளவ் தாரை,தாரையாக கண்ணீர் வடித்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகளின் தலைவன்,"கற்பை பறிகொடுத்த ஆயிஷா உயிரோடு இருக்க கூடாது.அவளை கற்களால் எறிந்து மரண தண்டனை கொடுங்கள்" என்று தீவிரவாத கும்பலுக்கு உத்தரவிட்டான்.

அதன்படி கிஸ்மாயோ அருகே உள்ள சகபாப் என்ற இடத்தில் உள்ள அரங்கத்தில் ஒரு லாரி நிறைய கற்கள் கொண்டு வந்து குவிக்கப்பட்டது.

பொதுமக்கள் ஆயிரம் பேர் முன்னிலையில் 50தீவிரவாதிகள் தங்களுடைய தலைவன் உத்தரவுப்படி சிறுமி ஆயிஷா மீது சரமாரியாக கற்களை வீசி தண்டனையை நிறைவேற்றினர்.

இதில் உடல் முழுவதும் ரத்த காயம் அடைந்து துடிதுடித்து விழுந்த ஆயிஷாவை தீவிரவாதிகள் உயிரோடு சமாதியாக்கினார்கள்
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1225875776&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment