Thursday, October 23, 2008

ஈராக்கில் பிணக்குவியல்

lankasri.comஈராக்கில் சிரியா நாட்டின் எல்லை அருகே புதிதாக பிணக்குவியல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த பிணக்குவியலில் 34 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாகவும்,இவர்கள் அனைவரும் ஈராக் ராணுவத்தில் பணிக்கு சேர இருந்தவர்கள் என்றும் கருதப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு சிரியா எல்லையில் உள்ள ஈராக்கின் ராணுவ பயிற்சி மையத்திற்கு வந்த அவர்கள் அல்கொய்தா தீவிரவாதி களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

யூபரேட்ஸ் நிதி பள்ளத்தாக்கு அருகே பிணங்கள் இருப்பது குறித்து கிராம மக்கள் தகவல் தெரிவித்ததாக உள்ளூர் மேயர் பர்கான் பிதாகான் கூறியுள்ளார்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1224755644&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment