| |
| |
| இது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகளை போலீஸர் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி விஎச்பி தலைவர் லட்சுமணானந்தா சரஸ்வதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கந்தமால் மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். தற்போது அங்கு இருவர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு மீண்டும் பதற்றம் நிலவுகிறது. விஎச்பி கோரிக்கை: இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக அப்பாவி இந்துக்களை போலீஸர் கைது செய்கின்றனர். இதனைத் தடுக்க மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நடவடிக்கை எடுக்க வேண்டும். லட்சுமணானந்தாவை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று விஎச்பி வலியுறுத்தியுள்ளது. |
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223101776&archive=&start_from=&ucat=1&

No comments:
Post a Comment