Sunday, October 26, 2008

இராக்கில் கார் குண்டு தாக்குதல்: 13 பேர் பலி, 21 பேர் காயம்

lankasri.comஇராக் தலைநகர் பாக்தாதில் அமைச்சருடன் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது வியாழக்கிழமை நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

ஷியா வகுப்பைச் சேர்ந்த தொழிலாளர் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் மஹ்மூத் முகமது அல்-ரதி மத்திய பாக்தாதில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரைக் குறிவைத்து அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது காரில் நிரப்பிக் கொண்டு வந்த வெடிகுண்டுகளை தீவிரவாதி வெடிக்கச் செய்தார்.

இதில் அமைச்சர் காயமின்றித் தப்பினார். எனினும், அவரது பாதுகாவலர்கள் 3 பேரும், பொதுமக்கள் 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஓராண்டாக இராக்கில் வன்முறை குறைந்து வந்த நிலையில், தற்போது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1224849904&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment