Tuesday, September 30, 2008

செய்தியும் 'பொய்'தியும்

   

1. இரயில்வே பட்ஜெட்டில் தென்மாவட்டப் புறக்கணிப்பைக் கண்டித்து போராட்டம் - டாக்டர் கிருஷ்ணசாமி

 

அடடே!... அட!!.....ஆமா!!!  இவரு ஒருத்தரு இருக்காருல்ல!?

 

2. அரசியல் கட்சிகளில் உள்ள ரவுடிகளை வெளியேற்ற வேண்டும் - தா.பாண்டியன்

 

அப்போ கட்சிகளையே களைக்கச் சொல்றீங்களா!?

 

3. காய்கறிகள் அதிகம் சாப்பிட்டால் 'ஸ்ட்ரோக்' வராது

 

ஆனா காய்கறி விலையைக் கேட்டா நிச்சயம் வரும்ங்க...

 

4. கற்பழித்த பெண்ணுக்கு வழங்க 7 லட்சம் இல்லை - மன்சூர் அலிகான்

 

லட்சியம் வேண்டுமானால் நிறைய உள்ளதாம்

 

5. ஒரு காலியிடத்துக்கு ஐந்து பேருக்கு பணி நியமன அழைப்பு விடப்படும்

 

ஏலம் கீலம் விடப்போறாகளோ!?

 

6. செக்ஸ் பற்றிய கிறிஸ்தவ தேவாலய வழிகாட்டி ஏடு

 

பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே! இவர்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னித்தருளும். ஆமென்!

 

7. பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் பயங்கர குண்டு வெடிப்பு பலி 28 பேர்

 

அதென்ன! பாகிஸ்தானா? பாம்'கிஸ்தானா?

 

8. மேக்கப் உமன் எனக்கூறி அமெரிக்கா கூட்டிச் செல்ல முயன்ற நடிகை மீது புகார்

 

அரிதாரம் கலைந்துவிட்டதோ!?

 

9. குளத்தை ஆக்கிரமிப்புச் செய்த பெண் போலீஸ் சூப்பிரண்டு -  செய்தி

 

நல்லவேள அந்தம்மா மெரீனா பீச் பக்கம் வரல!

- பாரதி கல்யாண்

 
செய்தியும் 'பொய்'தியும்
http://www.adhikaalai.com/index.php?/en/?????????-???????/

No comments:

Post a Comment