Tuesday, August 26, 2008

இலங்கை கிரிக்கெட்: இந்தியா வெற்றி

இலங்கை கிரிக்கெட்: இந்தியா வெற்றி
இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் நாள் போட்டியில் இலங்கையும், 2வது நாள் ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றிப் பெற்றன.

3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான விராத் கோக்லி 25 ரன்களும், கவுதம் காம்பீர் 8 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

யுவராஜ் சிங் 12, ரெய்னா 53, பத்ரிநாத் 6, சர்மா 32 ரன்கள், தோனி 76 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணியின் ஜெயசூர்யா 13, சங்ககரா 9, துஷாரா 30, ஜெயவர்த்தனே 94 ரன்கள் எடுத்தனர். அந்த அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. ஆட்டநாயகன் விருதை தோனி பெற்றார்.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

(மூலம் - வெப்துனியா)

No comments:

Post a Comment