| ஒரிசா: வி.ஹெச்.பி. தலைவர்கள் படுகொலை | |
| | |
| ஒரிசாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் உள்பட 5 பேர் பலியாகினர். கந்த்மால் மாவட்டம், புல்பானி என்ற இடத்தில் ஜலேஷ்பதா ஆஸ்ரமம் உள்ளது. இங்கு நேற்று நடந்த கோகுலாஷ்டமி பண்டிகை கொண்டாட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஸ்வாமி லட்சுமானந்த சரசுவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது ஆஸ்ரமத்திற்குள் நுழைந்த 30 பேர் கொண்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அங்கு இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் முக்கியத் தலைவர்களான அரூபானந்தா, சின்மயானந்தா மற்றும் மாதாபக்தி மயி உள்ளிட்ட 5 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. | |
| (மூலம் - வெப்துனியா) |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
No comments:
Post a Comment