Monday, August 4, 2008

ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் 17 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க்கொலை!

ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் 17 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க்கொலை! 
தெ‌ற்கு ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல், ஆ‌‌ப்கா‌னி‌ஸ்தா‌ன், நே‌ட்டோ படை‌‌‌யின‌ர் இணை‌ந்து, ‌த‌லிபா‌ன் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு எ‌திராக மே‌ற்கொ‌‌ண்ட நடவடி‌க்கை‌யி‌ல் 17 ‌‌தீ‌விரவா‌திக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌ம் 6 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

ஹெ‌ல்ம‌ண்‌ட் மாகாண‌த்‌தி‌ன், மா‌ர்‌ஜா மாவ‌ட்ட‌த்‌தி‌ல், கூ‌ட்டு‌ப்படை‌யினரு‌க்கு‌ம், ‌தீ‌‌விரவா‌திகளு‌க்கு‌ம் இடையே இ‌ந்த மோத‌‌‌ல் நட‌ந்ததாக ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌‌னி‌‌ன் பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌க‌ம் வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

‌பி‌ன்ன‌ர் ‌தீ‌விரவா‌திக‌ளி‌ட‌மிரு‌ந்த ஆயுத‌ங்களு‌ம், ஏராளமான வெடிபொரு‌ட்களு‌ம், 60 ‌கிலோ ‌கிரா‌ம் போதைபொரு‌ளு‌ம் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

ம‌த்‌திய கா‌ஜ்‌னி மாகாண‌த்‌தி‌ல் மறை‌ந்‌திரு‌ந்த ‌தீ‌விரவா‌திக‌ள் நட‌த்‌திய ‌திடீ‌ர்‌த் தா‌க்குத‌லி‌ல் தேடுத‌ல் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டிரு‌ந்த 4 காவ‌ல் துறை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்று‌ம் அ‌ந்த அ‌றி‌க்கை‌யி‌ல் கூற‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.
http://tamil.webdunia.com/newsworld/news/international/0808/04/1080804036_1.htm

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails