Saturday, July 26, 2008

பெ‌ங்களூர்: மேலும் ஒரு வெ‌டிகு‌ண்டு க‌ண்டு‌பிடி‌ப்பு!

பெ‌ங்களூர்: மேலும் ஒரு வெ‌டிகு‌ண்டு க‌ண்டு‌பிடி‌ப்பு!
பெ‌ங்களூரில் இன்றும் ஒரு வெடிகு‌ண்டு க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரில் 9 இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர்; பலர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூரில் கோரம‌ங்கல‌த்‌தி‌ல் உ‌ள்ள போர‌ம் மா‌ல் அருகே இன்று ச‌ந்தேக‌த்‌தி‌ற்கிடமான ம‌ர்ம‌ பா‌ர்ச‌ல் ஒ‌ன்று ‌கிட‌ந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து அதை பரிசோதினை செய்ததில் அதில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது.

இ‌ந்த‌ ச‌ம்பவ‌த்தா‌ல் போர‌ம் மா‌ல் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

(மூலம் - வெப்துனியா)

No comments:

Post a Comment