Monday, July 21, 2008

ஈராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் வாபஸ்: பிரவுன்

ஈராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் வாபஸ்: பிரவுன்
ராக்கில் முகாமிட்டுள்ள பிரிட்டன் படைகள் விரைவில் வாபஸ் பெறப்படும் என்று பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் பயணமாக ஈராக் சென்றுள்ள பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் கூறியதாவது:

பிரிட்டன் படையின் தலைமையகமாக செயல்படும் பாஸ்ரா விமான நிலையத்தின் பாதுகாப்பு விரைவில் ஈராக்கிடம் ஒப்படைக்கப்படும்.

2010ம் ஆண்டு பிரிட்டன் தேர்தலுக்கு முன்பாக, ஈராக்கிலிருந்து படைகள் திரும்பப் பெறப்படும்.

அதற்கு முன்னதாக ஈராக் படையினருக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


(மூலம் - வெப்துனியா)

No comments:

Post a Comment