Saturday, July 26, 2008

அகமதாபாத்தில் 17 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு-பரபரப்பு செய்திகள்

அகமதாபாத்தில் 17 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு.இது வரை 18 பேர் கொல்லப்பட்டனர்.
 
55 பேருக்குமேல் படுகாயம் அடைந்துள்ளனர்.மணி நகர்,பப்பு நகர், ஹர்கேஷ்வர்,ஜவஹர் நகர்,ராஜேந்திர பார்க், போன்ற நகரின் முக்கிய பகுதிகளில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.இதனால் அந்த மாநிலமே மிகவும் உச்சக்கட்ட பரபரப்பை அடைந்துள்ளது.ஒரு மணி நேரத்துக்குள் 16 குண்டுகள் வெடித்துள்ளது,மீண்டும் 10 நிமிடத்துக்குள் மீண்டும் ஒரு குண்டு வெடித்தது.
 
 
இதில் சந்தேகத்துக்கு இடமான இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது

No comments:

Post a Comment