Saturday, July 12, 2008

பளு தூக்கும் வீரர் அன்புக்கு கருணாநிதி ரூ. 10 லட்சம் பரிசு

பளு தூக்கும் வீரர் அன்புக்கு கருணாநிதி ரூ. 10 லட்சம் பரிசு
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

சென்னை:  தமிழகத்தைச் சேர்ந்த பளு தூக்கும் வீரர் என். அன்புக்கு முதல்வர் கருணாநிதி இன்று ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

பல்வேறு தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டுள்ள அன்பு இதுவரை 15 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு கேரளாவில் நடந்த தேசிய சாம்பியன் போட்டியில், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்ைதயும் அன்புவென்றார்.

அவரது சாதனைகளைப் பாராட்டும் வகையிலும், எதிர்கால சாதனைகளுக்கு ஊக்கம் தரும் வகையிலும் அன்புக்கு ரூ. 10 லட்சம் பரிசினை தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி இன்றுகாலை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை அன்பிடம் வழங்கினார்
 

No comments:

Post a Comment