| முகேஷ் அம்பானிக்கு ரூ.இரண்டரை லட்சம் அபராதம் | |
| மும்பை : ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, முறையான அனுமதியின்றி தனது வீட்டில் ஹெலிபேட் அமைத்துள்ளதற்காக இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மும்பை தெற்குப் பகுதியில் சீவைண்ட் அபார்ட்மென்டில் வசித்து வருகிறார். ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்காக, தனது வீட்டின் மாடியில் ஹெலிபேட் அமைக்க இவர் மும்பை மாநகராட்சியில் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால், அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பே, ஹெலிபேட் அமைக்கும் பணியை அம்பானி தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது மாநகராட்சியின் விதியை மீறிய செயல் என்றும், அவர் கட்டிவரும் கட்டிடத்தின் மதிப்பிற்கு இணங்க முகேஷ் அம்பானிக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், தற்போது நடைபெற்றுவரும் ஹெலிபேட் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு முகேஷ் அம்பானிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார் | |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
No comments:
Post a Comment