Tuesday, June 24, 2008

பாகிஸ்தானில் தலீபான் தளபதி உள்பட 19 பேர் பலி


 


இஸ்லாமாபாத், ஜுன். 25-

பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் சம்பத் பகுதியில் வானங்களில் சென்ற ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். உடனே ராணுவம் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் தலீபான் தளபதி கான் ஆகா பலியானார். மற்றும் 2 தீவிரவாதிகள் காயம் அடைந்தனர்.

ராணுவம் அந்த பகுதியை சுற்றி வளைத்தது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வீடு, வீடாக புகுந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதற்கிடையில் ஜன்டோலா பகுதியில் 2 தீவிரவாத குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் பலியானார்கள்.

இன்னொரு சம்பவத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேர் பிணமாக கிடந்தனர்.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=421272&disdate=6/25/2008

No comments:

Post a Comment