| சிறுமியை மணந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றவர் கைது |
| சென்னை: சிறுமியைக் கல்யாணம் செய்து அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக 45 வயது நபரை போலீஸார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த சிறுமி பவித்ரா (15). பத்தாவது வகுப்பு மாணவியான இவர் சென்னை புறநகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 18ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து போலீஸில் பவித்ராவின் பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில், பவித்ராவை ஆயிஷா மற்றும் அவரது கூட்டாளி சதீஷ் ஆகியோர் கடத்தினர். பின்னர் கோவையைச் சேர்ந்த அப்துல் என்பவரிடம், ரூ. 50 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு விற்றுள்ளனர். சிறுமியை விலை கொடுத்து வாங்கிய அப்துல் அவரை கல்யாணம் செய்து கொண்டார். பின்னர் பவித்ராவை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றார். இதையடுத்து அவரிடமிருந்து பவித்ரா தப்பினார். பின்னர் கோவையில் உள்ள காவல் நிலையத்தை அவர் அணுகினார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் கடத்தப்பட்டு விற்கப்பட்டு, அவரை அப்துல் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டது தெரிய வந்தது. பெருங்களத்தூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து அப்துல், பவித்ராவை திருமணம் செய்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அப்துல்லைக் கைது செய்தனர். ஆயிஷாவையும், சதீஷையும் வலை வீசி தேடி வருகின்றனர். |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
No comments:
Post a Comment